Thursday, March 19, 2009

ஆசையும் துன்பமும்




இஷா சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் சொற்பொழிவிலிருந்து :

ஆசை இல்லாத மனிதன் இல்லை. ஆசை நிறைவேறாத போதுதான் துன்பம் வருகிறது.
ஆனால் ஆசையை
துறந்தால் வாழ்வில் எந்த முன்னேற்றம் இல்லை. நாம் கல்லறை நோக்கி செய்யலாம் செல்ல வேண்டியதுதான்.

அதிக ஆசை கொண்டு அதற்காக முயற்சி செய்யலாம். வாழ்வில் முன்னேற்றம் வரும். ஆனால் நிறைவேறாத அதிக ஆசை அதிக துன்பம் அல்லவா தரும்?
குறைந்த அளவு ஆசை கொள்ளலாமா? அது நிறைவேறவில்லை என்றால் குறைந்த துன்பமா? அப்படியும் சொல்ல முடியாது. உதாரணமாக ஒரு பணக்காரன் ஏற்கனவே இரண்டு கார் வைத்திருக்கிறான். அவான் இன்னொரு காருக்கு ஆசைப்பட்டு அது அவனுக்கு கிடைக்கவில்லை. நிராசை அதனால் துன்பம். ஒரு ஏழை ஒரு மாடு வைத்திருக்கிறான். இன்னொரு மாட்டுக்கு ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் துன்பமடைகிறான். இருவரின் துன்பமும் அளவு ஒன்றுதான். ஆனால் ஆசைப்பட்ட பொருள்கள் மட்டுமே வேறு. ஏழை ஆசைப்பட்ட மாட்டின் விலை காரின் விலை விட குறைவு என்றாலும் துன்பம் குறைவு இல்லை.

No comments:

Post a Comment