Monday, May 21, 2012

தோற்ற மாணவர்களே, துவள வேண்டாம்.


இன்றைக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரப்போகுதுன்னு , ரெண்டு மூணு நாளாவே தொலைக்காட்சியில்பல மன நல மருத்துவர்களும் போது நலத் தொண்டர்களும் தேர்வில் தோற்கவோ அல்லது குறைந்த மதிப்பெண் வாங்கவோ போகும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் தேற்றும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். இதற்க்கு முந்தைய வருடங்களில் இது போன்ற நிகழ்சிகளே கிடையாது.

பெற்றோர்களின் அதிக பட்ச எதிர்பார்ப்புகளும், பிள்ளைகளின் பயமும் ( தனது எதிர் காலத்தை விட, பிள்ளைகள் பயப்படுவது தனது பெற்றோர்களின் ஏமாற்றதிற்குதான்) தோல்வி கண்ட மாணவர்களை தற்கொலை வரை துரத்துகிறது.

வெறும் தேர்வு மதிப்பெண்கள் நல்ல கல்லூரிகளில் நுழைய வேண்டுமானால் தேவைப் படும். ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற அது மட்டும் போதாது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்களோ, அல்லது பலமுறை தோற்று பின் வேன்றவர்களோ கூட வாழ்க்கையில் மிகப் பெரிய நிலையில் வந்திருப்பது உண்மை. மாறாக மிக அதிக மதிப்பெண்கள் வாங்கி, சிறந்த கல்லூரியுள் சேர்ந்தும் வாழ்வில் தோற்றவர்களும் உண்டு.

எனவே பிளஸ் டூவில் தோற்ற மாணவர்களே துவள வேண்டாம். பெற்றோர்களுக்காகவோ மற்றவர்களுக்காகவோ அஞ்ச வேண்டாம். தன்னம்பிக்கை, முயற்சி, கடின உழைப்பு மற்றும் சிறந்த குறிகோள்களை மேற்கொண்டு வாழ்வில் வெற்றி பெறுங்கள். பெற்றோர்களே, உங்கள் ஆசை வீணானதே என்று எண்ணாதீர்கள், உலகில் மதிப்பெண்களை விட பல முன்னேறும் வழிகள் இருப்பதால் தேர்வில் தோற்ற உங்கள் பிள்ளைகளை வாழ்வில் வெற்றி பெற ஊக்குவிங்கள்.

பில் கேட் என்ன சொல்லியிருக்கார் பாருங்க..

No comments:

Post a Comment